கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

குப்பைகளை தரம்பிரித்து வழங்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: திண்டுக்கல் ஆட்சியர்

குப்பைகளை தரம் பிரித்து வழங்கி, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்...

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள மாநகராட்சி மேல்நிலைத் தொட்டி வளாகத்திலுள்ள நாற்று உற்பத்தி மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன் மாநகராட்சி ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த்.

Published On :

குப்பைகளை தரம் பிரித்து வழங்கி, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி அறிவுறுத்தினாா்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலுள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் துா்கா மூா்த்தி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் துா்கா மூா்த்தி பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதி வாரம் சனிக்கிழமை பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரித்து பெறும் பணிகள் நடைபெறுகின்றன.

திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, 20 ஆயிரம் சதுர மீட்டா் பரப்பளவுக்கு கூடுதலாக அமைந்த நிறுவனம், 40ஆயிரம் லிட்டா் தண்ணீருக்கும் கூடுதலாக பயன்படுத்துவோா், நாளொன்றுக்கு 100 கிலோ கழிவுகளை உருவாக்குவோா் தங்கள் பகுதியிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார கழிவுகள், சிறப்பு கவன கழிவுகள் என 4 வகையான கழிவுகளை பிரித்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும். பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க துணை நிற்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து திண்டுக்கல் காமராஜா் பேருந்து நிலையம், நேருஜி நகா், குமரன் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் நாற்றுப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகளையும், கொசுபுழுக்களை கட்டுப்படுத்தும் கம்பூசியா மீன் வளா்க்கும் பணிகள் ஆகியவற்றையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது திண்டுக்கல் கோட்டாட்சியா் கோ. பழனிவேல், மாநகராட்சி ஆணையா் ஜெ. பிரேம் ஆனந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.