நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

உள் மாவட்டங்களில் இன்றுமுதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்

தமிழக உள் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 28) முதல் ஆக. 31-ஆம் தேதி வரை வெப்பம் இயல்பைவிட, சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 4:50 am IST

தமிழக உள் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 28) முதல் ஆக. 31-ஆம் தேதி வரை வெப்பம் இயல்பைவிட, சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் வியாழக்கிழமை பகலில் அதிகபட்சமாக, திருச்சியில் 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மேலும், மதுரை விமான நிலையம் - 102.2, மதுரை நகரம் - 101.12, பரங்கிப்பேட்டை - 100.76 என மொத்தம் 4 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

தமிழக உள் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 28) முதல் ஆக. 31-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாகவும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயல்பையொட்டி இருக்கும்.

மழைக்கு வாய்ப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால், வெள்ளிக்கிழமை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூா், பெரம்பலூா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடா்ந்து ஆக. 29 முதல் ஆக. 31-ஆம் தேதி வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லாா், சோலையாறு ஆகிய பகுதிகளில் தலா 80 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.