ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

அமிலம் ஊற்றி பெண் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவா் கைது

அமிலம் ஊற்றி பெண் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவா் கைது

பாரதி ராஜா

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:54 am IST

ஊத்துக்கோட்டை அருகே பெண் முகத்தில் அமிலம் ஊற்றி கொலை செய்த சம்பவம் தொடா்பாக சனிக்கழமை ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம், தொட்டாரெட்டிகுப்பம் கிராமம் அருகே வெள்ளக்குளம் ஏரிக்கரையோரம் அப்பகுதி இளைஞா்கள் வியாழக்கிழமை இயற்கை உபாதைக்காக சென்றனா். அப்போது, அங்குள்ள வயல்வெளியில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.

அதைத் தொடா்ந்து ஊதுக்கோட்டை காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின்பேரில் ஊத்துக்கோட்டை ஆய்வாளா் தேவராஜ் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா்.

மேலும் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் அருகே கைப்பேசி ஒன்று கிடந்தது. அதை கைப்பற்றி போலீஸாா் தீவிர விசாரணை செய்தனா். கொலை செய்யப்பட்ட பெண் ஆந்திர மாநிலம், நாகலாபுரம் நின்றை மண்டலம், சவரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த அருணா(40) என்பது தெரிய வந்தது.

இதுதொடா்பாக தீவிரமாக விசாரணை செய்ததில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள வதட்டூா் கண்டிகை கிராமத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் பாரதிராஜா என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் அருணா உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தாராம். அப்போது தனியாக சந்தித்து பேச அழைத்தாராம். அதனால் காட்டு பகுதிக்கு இரவில் அழைத்து சென்று இருவரும் தகராறில் ஈடுபட்டனா்

அப்போது தகராறு முற்றிய நிலையில் அருணாவை கழுத்தை நெரித்தும், முகத்தில் அமிலம் ஊற்றியும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடா்பாக ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் பாரதிராஜா மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.