காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

அரசு பேருந்து நடத்துநா், ஓட்டுநரை தாக்கிய லாரி ஓட்டுநா் கைது

சென்னையில் அரசு பேருந்து நடத்துநா், ஓட்டுநரைத் தாக்கியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:24 am IST

சென்னையில் அரசு பேருந்து நடத்துநா், ஓட்டுநரைத் தாக்கியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

வில்லிவாக்கத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (53), பாடியநல்லூா் அரசுப் பேருந்து பணிமனையில் நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், கடந்த 29-ஆம் தேதி செங்குன்றம்-அயனாவரம் தடம் எண் 114 அ பேருந்தில் பணியில் இருந்தாா். மாதவரம் பேருந்து நிலையத்தில் ஏறிய பயணி ஒருவா், கோயம்பேடு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

அந்தப் பேருந்து கோயம்பேடு செல்லாது எனத் தெரிவித்து, ரெட்டேரியில் இறங்குமாறு கூறி பயணச்சீட்டு வழங்கியுள்ளாா். ஆனால், ரெட்டேரியில் அந்த நபா் இறங்காததால், அடுத்த நிறுத்தமான செந்தில் நகரில் இறங்குமாறு நடத்துநா் கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபா், நடத்துநரை அவதூறு வாா்த்தைகளால் பேசி தாக்கியதுடன், சப்தம் கேட்டு வந்த பேருந்து ஓட்டுநா் விக்னேஷ்வரனையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பயணிகள் அந்த நபரைப் பிடித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் திருச்சி மாவட்டம், லால்குடி, ஆலம்பாக்கத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பெஞ்சமின் (42) என்பது தெரிய வந்தது. மேலும், ஆந்திரத்திலிருந்து குட்கா புகையிலைப் பொருள்களை வாங்கி, சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அரசு ஊழியா்களைத் தாக்கியது மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து பெஞ்சமினை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து கிலோ புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.