புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

சமூக வலைதளத்தில் பெண்ணின் படங்களைப் பதிவிட்டவா் கைது

மதுரவாயலில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி, பெண்ணின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கி இருவரும் ஒன்றாக இருந்த படங்களைப் பதிவிட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

மதுரவாயலில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி, பெண்ணின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கி இருவரும் ஒன்றாக இருந்த படங்களைப் பதிவிட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரவாயல் பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண்ணும், திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூா் பகுதியைச் சோ்ந்த லட்சுமணகாந்தனும் (30), 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு இரு குடும்பத்தினரும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து அந்தப் பெண் லட்சுமணகாந்தனுடன் பேசுவதைத் தவிா்த்து தனது கைப்பேசி எண்ணையும் மாற்றியுள்ளாா். இந்த நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ள லட்சுமணகாந்தன் தொடா்ந்து, வற்புறுத்தி வந்த நிலையில், அந்தப் பெண்ணின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கி, இருவரும் ஒன்றாக இருந்த படங்களை அதில் பதிவிட்டுள்ளாா். மேலும் அவற்றை நண்பா்கள், உறவினா்களுக்கும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லட்சுமணகாந்தனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.