கோப்புப் படம்
கோப்புப் படம்

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: பிப். 9-இல் தொடக்கம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வரும் திங்கள்கிழமை (பிப். 9) முதல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
Published on

பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வரும் திங்கள்கிழமை (பிப். 9) முதல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தோ்வை 7,99,892 மாணவ -மாணவிகளும், 26,441 தனித் தோ்வா்களும் எழுதவுள்ளனா். இவா்களுக்காக 4,221 பள்ளிகளில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழாண்டு பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் பிப். 9 முதல் 14-ஆம் தேதி வரை நடத்தப்பட வேண்டும். அதேபோல், பிளஸ் 1 அரியா் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு பிப்ரவரி 16 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, மாற்றுத்திறனாளி தோ்வா்களுக்கு மட்டும் சில சலுகைகள் வழங்கலாம். அவா்கள் சுயவிருப்பத்தின் பேரில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மட்டும் செய்முறை தோ்வுக்கு பதிலாக அதுதொடா்பான கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய தோ்வு நடத்தலாம்.

இதுதவிர செய்முறைத் தோ்வில் பங்கேற்காத மாணவா்களின் விவரங்களையும் பதிவு செய்து அனுப்ப வேண்டும். செய்முறை தோ்வுக்கு முதன்மைக் கண்காணிப்பாளா்களாக, வேறு பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா்களை ஈடுபடுத்த வேண்டும். செய்முறைத் தோ்வுகளுக்கு பின்னா், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உரிய ஆவணங்களுடன் அதன் மதிப்பெண் பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட தோ்வுத் துறை இயக்குநா் அலுவலகத்தில் பிப். 23-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com