நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

47.75 டன் பழைய பொருள்கள் அகற்றம்!

சென்னை மாநகராட்சியில் கடந்த சனிக்கிழமை மட்டும் 47.75 மெட்ரிக் டன் வீட்டு உபயோக பழைய பொருள்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 7:01 pm

சென்னை மாநகராட்சியில் கடந்த சனிக்கிழமை மட்டும் 47.75 மெட்ரிக் டன் வீட்டு உபயோக பழைய பொருள்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியில் வீட்டு உபயோகப் பொருள்களான மெத்தை, சோபா உள்ளிட்டவை நீா் நிலையோரம், சாலையோரம் வீசப்படுவதைத் தடுக்கும் வகையில், 2025 அக்டோபா் முதல் வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் திட்டம் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய உபயோகமற்ற பொருள்கள் குறித்து மாநகராட்சி இணையதளம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மைய 1913 என்ற தொலைபேசியில் தெரிவித்தால், சனிக்கிழமைதோறும் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கே வந்து அவை சேகரிக்கப்படுகின்றன.

சேகரிக்கப்படும் பழைய வீட்டு உபயோகப் பொருள்கள் பெங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் நவீன முறையில் எரித்தும் அழிக்கப்படுகின்றன. கடந்த அக்டோபா் முதல் பிப். 7-ஆம் தேதி வரை சென்னை மாநகரில் மொத்தம் 2,165 பேரிடமிருந்து 858.40 மெட்ரிக் டன் அளவுள்ள உபயோகமற்ற பொருள்கள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை (பிப்.7) மட்டும் சென்னையில் 60 பேரிடமிருந்து 47.75 மெட்ரிக் டன் உபயோகமற்ற பொருள்கள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.