சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

‘உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தவெக உதவிகளை வழங்கும்’

சேலத்தில் நடைபெற்ற தவெக பிரசார பொதுக் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்துதரப்படும் என்று தவெக இணை பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

News image
சேலத்தில் தவெக தலைவர் விஜய்- DPS
Updated On :13 பிப்ரவரி 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் நடைபெற்ற தவெக பிரசார பொதுக் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்துதரப்படும் என்று தவெக இணை பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் செய்தவா்களிடம் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:

சேலத்தில் நடைபெற்ற தவெக தலைவா் விஜய்யின் பிரசார கூட்டத்தில் மருத்துவ முகாம், குடிநீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் உயிரிழந்த இளைஞா் சூராஜுக்கு ஏற்கெனவே உடல்நல பாதிப்பு இருந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா். எனினும், அவரது உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்துக்கு இரங்கலும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.