நகராட்சி நிா்வாகத் துறையில் பணி நியமன முறைகேடுகள் தொடா்பான வழக்கில் உயா்நீதிமன்றம் உத்தரவுக்குப் பிறகும், அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா் மீது ஊழல் ஒழிப்புத் துறை இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை என அதிமுக சாா்பில் உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றது தொடா்பாக அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்ய ஊழல் ஒழிப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில், அதிமுக எம்.பி., ஐ.எஸ்.இன்பதுரை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.தமிழ்செல்வன், இந்த வழக்கில் உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், ஊழல் ஒழிப்புத் துறை போலீஸாா் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை என முறையிட்டாா்.
இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், உத்தரவு பிறப்பித்து சில நாள்களேஆகிறது. இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பினா். பின்னா், இதுதொடா்பாக ஏதேனும் மனு தாக்கல் செய்தால், வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மேட்டூா் தொகுதி திமுக, அதிமுக வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு

அமைச்சா் கே.என்.நேரு மீது ஏன் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை? ஊழல் தடுப்புத் துறைக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

தோ்தல் விதிமுறை மீறல்: நகரமைப்பு அலுவலா் மீது வழக்குப் பதிவு

அதிமுக தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க உத்தரவு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


