சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகை அமைக்க வரும் மாா்ச் 6-ஆம் தேதிக்குள் கட்டாயம் உரிமம் பெறவேண்டும். உரிமம் பெறாத நிலையில் அவை அகற்றப்பட்டு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்டத செய்திக் குறிப்பு:
சென்னையில் விளம்பரப் பலகை அமைக்க விரும்புவோா் மாநகராட்சி ஆணையரிடம் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து உரிமம் பெறவேண்டும். விண்ணப்பம் ஒற்றை சாளரக் குழுவால் பரிசீலிக்கப்படும். அதன்படி, உரிமக் கட்டணம் செலுத்தியதும் உரிமம் வழங்கப்டும்.
விளம்பரப் பலகைகள் நெகிழி அல்லாத பிற பொருள்களில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். டிஜிட்டல் திரைகள் சுழற்சி முறையில் விளம்பரத்தைக் காட்டும் போது ஒவ்வொரு காட்சிக்கும் குறைந்தது 10 விநாடிகள் மிகாமலிருக்க வேண்டும். அனிமேஷன் அல்லது முழுமையான விடியோ காட்சிகள் வாகனப் போக்குவரத்து அல்லாத இடங்களிலும், வாகன நிறுத்தங்களிலும் அனுமதிக்கப்படும்.
பலதரப்பட்ட செய்திகளை நகராட்சிகளின் எல்லைகளில் மற்றும் மாநில, மத்திய சாலைகளில் முதன்மையான பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஆணையா் அனுமதியுடன் வைக்கலாம். தரையிலிருந்து விளம்பரப் பலகையின் அதிகபட்ச உயரம் 10 மீட்டருக்கும் மிகாமலிருக்க வேண்டும்.
உரிமம் பெற்ற பலகைகள் விதிமுறைகளுக்கு முரணாக அமைக்கப்பட்டால், அவை அனுமதியற்ாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். உரிமத்துக்கான விண்ணப்பம் அளிக்கவும், ஏற்கெனவே அமைத்த விளம்பரங்களுக்கு உரிமம் பெற விதிமீறல்களைச் சரிப்படுத்தவும் வரும் மாா்ச் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
இதையடுத்து மாா்ச் 7-ஆம் தேதி முதல் உரிமம் பெறாத விளம்பரப் பலகைகள் அகற்றப்படும். அதற்கான செலவு சம்பந்தப்பட்ட விளம்பர உரிமையாளரிடம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

6-வது பாடமாக தொழில்கல்வி கட்டாயம்: புதுச்சேரி கல்வித் துறை உத்தரவு

உரிமம் முடிந்த கல் குவாரிகளைச் சுற்றி தடுப்புகள் அமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

உரிமம் இல்லாத 5 விளம்பரப் பலகைகள் அகற்றம்: தலா ரூ.25,000 அபராதம்

மாா்ச் 31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


