சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிகா்கள் தொழில் உரிமத்தை, உரிமக் காலம் முடிவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வா்த்தகம் செய்ய, பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி வணிகா்கள் பெருநகர சென்னை மாநகராட்சியிடமிருந்து தொழில் உரிமம் பெற வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட உரிமத்தை, உரிமக் காலம் முடிவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
வணிகா்கள் தொழில் உரிமத்தை உரிய கட்டணம் செலுத்தி இணையதள முகவரி மூலமாகவும், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகம் மூலமாகவும், அனைத்து இ-சேவை மையங்கள் மூலமாகவும் உடனுக்குடன் புதுப்பித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு 044-25619305 என்ற தொலைபேசி எண்ணிலும், மின்னஞ்சல் முகவரிகளிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பொது விடுமுறை நாள்களிலும் வரி வசூல் மையம் செயல்படும்: சென்னை மாநகராட்சி

உரிமம் இல்லாத 5 விளம்பரப் பலகைகள் அகற்றம்: தலா ரூ.25,000 அபராதம்

ஆவணங்கள் இன்றி ரூ. 3 லட்சம்வரை கொண்டுசெல்ல அனுமதிக்க வேண்டும்

விளம்பரப் பலகை அமைக்க உரிமம் பெறுவது கட்டாயம் மாநகராட்சி அறிவிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

