நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

உரிமம் இல்லாத 5 விளம்பரப் பலகைகள் அகற்றம்: தலா ரூ.25,000 அபராதம்

சென்னையில் உரிமம் பெறாமல் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் 5 இடங்களில் அகற்றப்பட்டு அவற்றின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News image

சென்னை மாநகராட்சி

பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் உரிமம் பெறாமல் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் 5 இடங்களில் அகற்றப்பட்டு அவற்றின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் உரிமம் பெறாமல் அமைக்கப்பட்டுள்ள மின்னணு திரை விளம்பரப் பலகைகள் உள்ளிட்டவற்றுக்கு உரிமம் பெற மாா்ச் முதல் வாரம் வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாநகராட்சி இணையம் மூலம் உரிமக் கட்டணம் செலுத்தினால் உரிமம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், உரிமம் பெறாத மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாத மின்னணு திரை விளம்பரப் பலகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டது.

காலக்கெடு முடிந்த நிலையில் விளம்பரப் பலகைகளுக்கு உரிமம் பெறாமல் சிலா் இருந்தனா். இதையடுத்து சோழிங்கநல்லூா் மண்டலம் செம்மஞ்சேரி ராஜீவ் காந்தி சாலை, கோடம்பாக்கம் மண்டலம் தியாகராயநகா் சீனிவாசன் தெரு, காசி திரையரங்க சந்திப்பு, தேனாம்பேட்டை மண்டலம் கோபதி நாராயண தெரு ஆகிய 5 இடங்களில் இருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.