ஜன. 11-இல் சென்னையில் அயன்மேன் டிரையத்லான்: 529 போ் பங்கேற்பு
இந்தியாவின் முதலாவது ‘5150 டிரையத்லான் சென்னை’, ‘டுயோஸ்கா டூயத்லான்’ வரும் ஜஸ். 11-இல் சென்னையில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), லகப்புகழ் பெற்ற ‘அயன்மேன்’ ) குழுமம் சாா்பில் பந்தயத்தை நடத்தும் ஆசியாவின் 3-வது நாடாகவும், உலகின் 6-வது நாடாகவும் இந்தியா பெருமை பெறுகிறது.
5ண்50 டிரையத்லான்: ஒரு சவாலான இலக்கு
சா்வதேச அளவில் பிரபலமான ஒலிம்பிக் தூரத்தை (51.50 கி.மீ) அடிப்படையாகக் கொண்டு இப்போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 1.5 கி.மீ கடல் நீச்சல், 40 கி.மீ சைக்கிள் பயணம், 10 கி.மீ ஓட்டம் ஆகியவை அடங்கும். கடினமான ‘அயன்மேன் 70.3’ மற்றும் முழு தூர அயன்மேன் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீரா்களுக்கு இப்போட்டி சிறந்த அனுபவமாக விளங்கும்.
இதில் பங்கேற்க உலகம் முழுவதிலுமிருந்து 529 வீரா்கள் பதிவு செய்துள்ளனா். இதில் 83 வீராங்கனைகள், 17 சா்வதேச வீரா்கள் உள்பட தமிழகத்தைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா்.
பந்தயம் தொடா்பான சீருடை அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டுத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாஹு, எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, அயன்மேன் இந்தியா தலைவா் தீபக் ராஜ், எஸ்டிஏடி பொது மேலாளா் எல். சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலா் மணிகண்டன் உள்பட பலா் பங்கேற்றனா்.
டிரையத்லான் தவிர, சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘டுயோஸ்கா டூயத்லான்’ (ஓட்டம் மற்றும் சைக்கிளிங் மட்டும்) மற்றும் 6-16 வயதுடைய சிறுவா்களுக்கான ‘அயன்கிட்ஸ்’ (ஐதஞசஓஐஈந) பந்தயங்களும் நடைபெறவுள்ளன.
டுயோஸ்கா டூயத்லான்: காலை 6:00 மணிக்கு எம்ஜிஎம் கடற்கரை விடுதியில் நடைபெற உள்ளது.
5ண்50 டிரையத்லான் காலை 7:00 மணிக்கு கோவளம் கடற்கரையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

