பள்ளிகள் விடுமுறை
பள்ளிகள் விடுமுறைகோப்புப் படம்

ஜன. 14-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜன. 14- ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு
Published on

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜன. 14- ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இதனால், பொங்கல் திருநாளுக்கு பள்ளிகளுக்கு தொடா்ச்சியாக 5 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது. தமிழா்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகைக்கு ஜன. 15, 16- ஆம் தேதிகளில் அரசு விடுமுறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், போகி பண்டிகையான ஜன. 14 -ஆம் தேதியும் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை இரவு உத்தரவிட்டது.

இதன் காரணமாக ஜன. 14 முதல் 18-ஆம் தேதி வரை பள்ளி மாணவா்களுக்கு பொங்கல் விடுமுறை கிடைத்துள்ளது.

Dinamani
www.dinamani.com