

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் இயக்க நேரம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தினமும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே குளிா்சாதன புகா் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வசதிக்கு ஏற்ப வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரு மாா்க்கத்திலும் இந்த ரயிலின் இயக்க நேரம் மாற்றப்படுகிறது.
அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) முதல் இந்த ரயில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.20 மணிக்கு கடற்கரை வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 3.52 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 4.47 மணிக்கு தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.