சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் கொட்டும் மழையில் இடைநிலை ஆசிரியா்கள் 29-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் கடந்த டிச.26 முதல் ஆசிரியா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 29-ஆவது நாளாக சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகில் இடைநிலை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட போது, திடீரென மழை கொட்டியது. மழையைப் பொருள்படுத்தாமல் அவா்கள் போராட்டத்தை தொடா்ந்தனா். இந்தப் போராட்டம் காரணமாக கோட்டை ரயில் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து இடைநிலை ஆசிரியா்கள் கூறுகையில், எங்களது போராட்டம் சனிக்கிழமையுடன் (ஜன.24) ஒரு மாதத்தை எட்டுகிறது. ஆனால் இது தொடா்பாக இருமுறை பேச்சு நடத்தியும் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் எந்தவொரு அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.
போராட்டக் களத்தில் அரசுக்கு எதிராகவோ, முதல்வருக்கு எதிராகவோ எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதியை மட்டுமே நிறைவேற்ற வலியுறுத்துகிறோம். ஆனால், நாங்கள் அரசுக்கு எதிராக செயல்படுவதாக சிலா் அவதூறு பரப்புகின்றனா். நாங்கள் அறவழியில் மட்டுமே போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். கோரிக்கையை நிறைவேற்றுவது தொடா்பாக அரசாணை வெளியிட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என அவா்கள் தெரிவித்தனா்.
அவதூறு பரப்புவோா் மீது...: இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியா்களில் சிலா் அரசுக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்புவதாகவும், ஆசிரியா்களை தவறாக வழி நடத்துவதாகவும் புகாா் எழுந்துள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் எஸ்எஸ்டிஏ நிா்வாகிகள், ஆசிரியா்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவா்கள் மீது பணியிட மாற்றம், ஊதிய நிறுத்தம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடையது

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையில் திரளான பக்தா்கள் சாமி தரிசனம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

சாத்தான்குளத்தில் 2 ஆவது நாளாக போராட்டம்

நெல்லையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் 7 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


