நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

2,065 பேரிடமிருந்து 806 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் சேகரித்து அகற்றம்

2,065 பேரிடமிருந்து 806 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் சேகரித்து அகற்றம்

News image

சென்னை மாநகராட்சி

Updated On :31 ஜனவரி 2026, 7:23 pm

பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுவரை 2,065 பேரிடம் இருந்து 806.37 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் சேகரித்து, அகற்றப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்களின் வீடுகளில் இருந்து பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள், உடைகள் உள்ளிட்ட திடக்கழிவுகளைப் பெற்று அகற்றும் பணி நடைமுறையில் உள்ளது.

அதன்படி, இதுவரை 17 சனிக்கிழமைகளில் 2,065 பேரிடம் இருந்து 806.37 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டு, அகற்றப்பட்டு உள்ளன. சனிக்கிழமை (ஜன.31) ஒரு நாள் மட்டும் 100 பேரிடம் இருந்து 51.93 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்துக்கு எடுத்துச் சென்று நவீன முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது என்று பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.