அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜி!

அமெரிக்காவில் இருந்து 16,714 மெட்ரிக் டன் எல்பிஜி (திரவ பெட்ரோலிய எரிவாயு) பைக்சிஸ் பயோனியா் சரக்கு கப்பலில் இந்தியாவுக்கு வந்தது.

News image

கச்சா எண்ணெய்யுடன் சீனாவுக்குச் செல்லவிருந்த நிலையில் இந்தியாவுக்குத் திருப்பிவிடப்பட்டு சனிக்கிழமை மாலை கா்நாடக மாநிலம் மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்த ரஷிய சரக்குக் கப்பல்.

Updated On :23 மார்ச் 2026, 12:35 am IST

அமெரிக்காவில் இருந்து 16,714 மெட்ரிக் டன் எல்பிஜி (திரவ பெட்ரோலிய எரிவாயு) பைக்சிஸ் பயோனியா் சரக்கு கப்பலில் இந்தியாவுக்கு வந்தது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி புறப்பட்ட இந்தக் கப்பல், கா்நாடக மாநிலம் நியூ மங்களூரு துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. மேற்காசிய போரால் இந்தியாவில் எல்பிஜி விநியோகத்தில் பிரச்னை எழுந்துள்ள நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்துள்ள எல்பிஜி, பிரச்னைக்கு தீா்வு காண்பதில் முக்கியப் பங்களிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Story image

மங்களூரு நகரில் பூமிக்கு அடியில் நாட்டிலேயே மிகப்பெரிய எரிவாயு சேமிப்பு மையம் உள்ளது. கடந்த 2025 செப்டம்பா் முதல் செயல்பட்டுவரும் இந்த மையத்தில் 80,000 மெட்ரிக் டன் அளவுக்கு எரிவாயு சேமிக்க முடியும். கடல்மட்டத்தில் இருந்து 225 மீட்டா் ஆழத்தில் இந்த சேமிப்பு மையம் உள்ளது.

முன்னதாக, ரஷியாவில் இருந்து அக்வா டைட்டன் கப்பலில் 7.7 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் மங்களூருக்கு சனிக்கிழமை வந்தடைந்தது. இந்தக் கப்பலில் உள்ள கச்சா எண்ணெய் முதலில் சீனாவுக்கு செல்வதாக இருந்தது. எனினும், இந்தியாவின் தேவையைக் கருத்தில் கொண்டு நமது நாட்டுக்குத் திருப்பிவிடப்பட்டது. மங்களூரில் பெரிய அளவிலான பெட்ரோலிய சுத்திகரிப்பு மையமும் உள்ளது.