ஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்த எல்பிஜி சரக்குக் கப்பல்!

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி ஏற்றிவந்த சரக்குக் கப்பல் மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது.

LPG cargo ship from US

எல்பிஜி ஏற்றிவந்த கப்பல் - ANI

Published On :

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி ஏற்றிவந்த சரக்குக் கப்பல் மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவிலிருந்து எல்பிஜி ஏற்றி வந்த சரக்குக் கப்பல், கர்நாடக மாநிலத்தில் உள்ள புதிய மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது. மேலும், மங்களூரு துறைமுகத்துக்கு எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்களுக்கு, மார்ச் 31 வரையில் சரக்குக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.

மேலும், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி, எல்பிஜி பற்றாக்குறை ஏற்படலாம் என பொதுமக்கள் பீதியடைந்து, முண்டியடித்துக் கொண்டு பெட்ரோல் வாங்குவதும், எல்பிஜி முன்பதிவு செய்வதுமாய் இருந்தனர். இருப்பினும், நாட்டில் எல்பிஜி பற்றாக்குறை இல்லையென மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கு உலக நாடுகளிடம் அமெரிக்கா உதவியும் கோரி வருகிறது.

Summary

Karnataka: LPG cargo ship from US arrives at New Mangalore Port

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.