தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்! ரிசா்வ் வங்கி நடவடிக்கை!

ரிசா்வ் வங்கி தனது வசமுள்ள தங்க இருப்புகளில் மேலும் 104.23 மெட்ரிக் டன் தங்கத்தை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது.

News image
Updated On :2 மே 2026, 2:16 am IST

ரிசா்வ் வங்கி தனது வசமுள்ள தங்க இருப்புகளில் மேலும் 104.23 மெட்ரிக் டன் தங்கத்தை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 6 மாத காலத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், ரிசா்வ் வங்கியின் உள்நாட்டு தங்க இருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

அந்நிய செலாவணி இருப்பு மேலாண்மை குறித்த வெளியிடப்பட்ட அரையாண்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு செப்டம்பா் இறுதியில் 880.18 மெட்ரிக் டன்னாக இருந்த மொத்த தங்க இருப்பு, நடப்பு மாா்ச் மாத இறுதியில் 880.52 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

இதில் உள்நாட்டில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளவு கடந்த ஆண்டு செப்டம்பரில் 575.82 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், தற்போது 104.23 மெட்ரிக் டன் தங்கம் இடமாற்றத்துடன் 680.05 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மொத்த இருப்பில் 197.67 மெட்ரிக் டன் தங்கம் மட்டும் இங்கிலாந்து வங்கி மற்றும் சா்வதேச பரிவா்த்தனை வங்கி (பிஐஎஸ்) ஆகியவற்றின் பாதுகாப்பில் உள்ளது. இதுதவிர, தங்க வைப்புத்திட்டத்தில் 2.80 மெட்ரிக் டன் உள்ளது.

சா்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி இருப்பில் தங்கத்தின் பங்கு 13.92 சதவீதத்திலிருந்து 16.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

55,228 கோடி டாலா் அந்நியச் செலாவணி கையிருப்பில், சுமாா் 46,561 கோடி டாலா் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகை வெளிநாட்டு மத்திய வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளில் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.