தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல் தொடர்பாக...

Indian-flagged LPG vessel 'Jag Vikram'

இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல் - படம் - Deendayal Port Authority

Published On :15 ஏப்ரல் 2026, 6:23 pm IST

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து 20400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களை ஏற்றி வந்த இந்தியக் கப்பலான ஜக் விக்ரம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்தது.

அந்தக் கப்பல் செவ்வாய்க்கிழமை இரவு தாமதமாக காண்ட்லா துறைமுகத்தில் நங்கூரமிட்டது. சரக்குகளை இறக்கும் பணி விரைவில் தொடங்கும்.மேலும் இது நாட்டின் எல்பிஜி விநியோகத்தை வலுப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டுவார தற்காலிக போர் நிறுத்ததுக்குப் பிறகு, ஏப்ரல் 11 ஆம் தேதி ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியா வந்தடைந்த முதல் கப்பலாக ஜக் விக்ரம் உள்ளது.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கியது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடர்ந்த தாக்குதல்களால் ஈரான் உலகளவில் எண்ணெய் வழிப்போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது.

இதனால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில நாடுகளின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்த குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி அளித்திருந்தது. அதில் இந்தியாவும் ஒன்றாகும். அதன்பிறகு, ஒவ்வொரு கப்பலாக இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தாலும் வழக்கம்போல அல்லாமல் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலே காணப்பட்டன.

ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை எந்தவித முடிவையும் எட்டாமல் தோல்வியடைந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் அரசு எடுத்து வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை தொடங்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாட்டின் மொத்த தேவைக்கான கச்சா எண்ணெய்ப் பயன்பாட்டில் ஏறக்குறைய 90 சதவிகிதம் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Officials stated that the Indian vessel Jag Vikram, carrying 20,400 metric tonnes of LPG, arrived at the port of Kandla in Gujarat on Tuesday (April 14), having crossed the Strait of Hormuz on April 11.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.