ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுடன் பாடி மகிழ்ந்த விக்ரம்!

நடிகர் விக்ரம் பகிர்ந்த புதிய விடியோ...

News image

விக்ரம்

Updated On :17 மே 2026, 2:57 pm IST

நடிகர் விக்ரம் மூணாரில் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுடன் பாடல் பாடி மகிழ்ந்தார்.

நடிகர் விக்ரம் தன் 63-வது திரைப்படத்திற்குத் தயாராகி வருகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கும் இப்படத்தில் நாயகியாக நடிகை ரியா ஷிபு நடிக்கிறார். முழு ஆக்சன் திரைப்படமாக இது உருவாகவுள்ளது.

வீர தீர சூரன், தங்கலான் ஆகிய படங்கள் வணிக ரீதியாக பின்னடவைச் சந்தித்ததால் விக்ரமும் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில், மூணார் சென்ற நடிகர் விக்ரம் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளைச் சந்தித்தார். விக்ரமைக் கண்ட பெண்கள் பலரும், அவர் நடித்த படங்களில் தங்களுக்குப் பிடித்தவை குறித்து சிலாகரித்து பேசினர்.

தொடர்ந்து, அவர்களுடன் இணைந்து அந்நியன் படத்தில் இடம்பெற்ற, ‘அண்டங்காக்கா கொண்டக்காரி’ பாடலைச் சேர்ந்து பாடி மகிழ்ந்தார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Vikram enjoyed singing songs with tea plantation workers in Munnar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.