பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

விக்ரமே எதிர்பார்க்காத வைரல்!

விக்ரம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் குறித்து...

actor vikram

விக்ரம்

Published On :

நடிகர் விக்ரமின் விடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது.

வீர தீர சூரன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் தன் அடுத்த திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். விக்ரம் - 63 படமாக உருவாகும் இதனை ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ளார்.

தங்கலான், வீர தீர சூரன் என அடுத்தடுத்து வணிக ரீதியான சருக்கல்களைச் சந்தித்தாலும் ரசிகர்கள் விக்ரம் காத்திரமான படத்துடன் வருவார் என்கிற நம்பிக்கையில் உள்ளனர்.

இந்த நிலையில், அண்மையில் தன் பிறந்த நாளின் போது விக்ரம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய ரீல்ஸ் விடியோவை வெளியிட்டார். அதில், தனியாக இருக்கும் ஒருவர் நம்மையே பார்ப்பது போல் இருந்தது.

அதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் வித்தியாசமாகவும் நகைச்சுவையாகவும் விக்ரம் தங்களைப் பின்தொடர்வது போல் ரீல்ஸ்களாக மாற்றி வெளியிட்டனர். இவை அனைத்தும் டிரெண்டிங்கில் இடம்பிடித்து அசத்தயுள்ளது.

ஆச்சரியமாக, இதுவரை விக்ரமின் ரீல்ஸ் 5 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டதுடன் 60 லட்சம் விருப்பங்களையும் 87 ஆயிரம் காமெண்டுகளையும் பெற்றுள்ளது. முக்கியமாக, கேரள காவல்துறை போதைப்பொருளுக்கான எச்சரிக்கைக்காக விக்ரம் விடியோவை பயன்படுத்தியுள்ளனர்.

Actor Vikram's video has gone massively viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.