நடிகர் விக்ரமின் புதிய புகைப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
நடிகர் விக்ரம் தன் 63-வது திரைப்படத்திற்குத் தயாராகி வருகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கும் இப்படத்தில் நாயகியாக நடிகை ரியா ஷிபு நடிக்கிறார். முழு ஆக்சன் திரைப்படமாக இது உருவாகவுள்ளது.
வீர தீர சூரன், தங்கலான் ஆகிய படங்கள் வணிக ரீதியாக பின்னடவைச் சந்தித்ததால் விக்ரமும் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ஆனந்த் ஷங்கருடனான படத்திற்காக உடலைக் கட்டுமஸ்தாக மாற்றும் முயற்சியிலும் இருப்பதால் உடல்பயிற்சிகளைத் தீவிரமாக செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் விக்ரம் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நேர்த்தியான உடல் அமைப்புடன் வயது குறைந்த தோற்றத்தில் விக்ரம் காணப்படுவதால் பலரும் இளைஞர்களை மன உளைச்சல் செய்வதே இவரின் வேலையாகிவிட்டது என கிண்டலாக கருத்திட்டு வருகின்றனர்.
முன்னதாக, மூணார் சென்ற நடிகர் விக்ரம் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளைச் சந்தித்து அவர்களுடன் பாடி மகிழ்ந்த விடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
Actor Vikram's new photograph is garnering attention among fans.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!
விக்ரம் பிரபுவின் 26ஆவது திரைப்படம் அறிவிப்பு!
விக்ரமின் சியான் - 63 படப்பிடிப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சியான் - 63 படப்பிடிப்பு தொடக்கம்!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK


