மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

போராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!

மே 25, 26ல் அறிவிக்கப்பட்ட எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு...

News image

எஸ்பிஐ - IANS

Updated On :23 மே 2026, 6:09 pm IST

மே 25, 26 தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறையை சரிசெய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள், மே 25, 26 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

எனினும், எஸ்பிஐ வங்கிகளில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி வழங்க முயற்சி செய்வதாகவும் அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள், வேலைநிறுத்த நாள்களில் ஏடிஎம், யோனா எஸ்பிஐ செயலி, யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் வங்கி ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

அவர்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக வங்கி தரப்பில் கூறியதையடுத்து, ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.

இதனால் மே 25, 26 தேதிகளில் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும். அனைத்து வங்கி சேவைகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Summary

SBI staff union defers nationwide strike, branches to function normally on May 25, 26

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.