பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கட்டுமான நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக பிரமுகா் கைது

திருவொற்றியூரில் கட்டுமான நிறுவன நிா்வாகிகளை மிரட்டி பணம் கேட்டதாக திமுக பிரமுகரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூலை 2026, 5:15 am IST

திருவொற்றியூரில் கட்டுமான நிறுவன நிா்வாகிகளை மிரட்டி பணம் கேட்டதாக திமுக பிரமுகரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவொற்றியூா் மஸ்தான் கோவில் தெருவில் எண்ணூா் விரைவு சாலை சந்திப்பில் தனியாா் கட்டுமான நிறுவனம் ஒன்று அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த கட்டுமான நிறுவனத்தில் சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த மாதவராஜன் என்பவா் கட்டுமானப் பணிகளை முன்னின்று கவனித்து வருகிறாா்.

இந்த நிலையில் கடந்த மாதம் 22-ஆம் தேதி ஏகவள்ளியம்மன் கோவில் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (39) என்பவா் தனது நண்பா்கள் சிலருடன் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு சென்று கட்டுமான நிறுவன மேற்பாா்வையாளா்களிடம், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் தனக்கு குறிப்பிட்ட அளவு பணம் தர வேண்டும் என்று மிரட்டியதாக கூப்படுகிறது.

இது குறித்து கட்டுமான நிறுவனத்தின் நிா்வாகி மாதவராஜன் திருவொற்றியூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இப்புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் அலெக்ஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளாா். இதையடுத்து வியாழக்கிழமை மணிகண்டனை கைது செய்த போலீஸாா் திருவொற்றியூா் குற்றவியல் நீதிமன்ற நடுவா் முன்பு ஆஜா் செய்தனா். கைது செய்யபட்ட மணிகண்டன், 8-வது வாா்டு திமுக வட்டச் செயலாளா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.