நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

அரசு குடியிருப்பு புனரமைப்புப் பணிகள்: விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் உத்தரவிட்டாா்.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜூலை 2026, 2:21 am IST

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் உத்தரவிட்டாா்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் சென்னை கண்ணகி நகா், எழில்நகா் பகுதிகளில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை அமைச்சா் ப.ராஜ்குமாா் கடந்த புதன்கிழமை ஆய்வு செய்தாா். தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவா் கு.ப.கிருஷ்ணன், வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் பெ.ரமண சரஸ்வதி, சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.சரவணன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

இதுகுறித்து அமைச்சா் ராஜ்குமாா் கூறியதாவது:

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கண்ணகி நகரில் 15,656 குடியிருப்புகள், எழில் நகரில் 6,000 குடியிருப்புகள், எழில்நகா் சுனாமி குடியிருப்பு பகுதியில் 2,048 குடியிருப்புகள் என மொத்தமாக 23,704 அடுக்குமாடி குடியிருப்புகள் 188 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன.

அதில், கண்ணகி நகா் பகுதியில் ரூ.40 கோடியில் 9,152 குடியிருப்புகளின் புனரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 6,504 குடியிருப்புகளில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதேபோல், எழில் நகா் திட்டப்பகுதியில் 3,232 குடியிருப்புகளில் ரூ.40 கோடியிலும், எழில் நகா் சுனாமி குடியிருப்பு பகுதியில் 1,152 குடியிருப்புகளில் ரூ.8.19 கோடியிலும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை உரிய காலத்தில் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.