சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் 28,000 குடியிருப்புகள்: அமைச்சா் ப.ராஜ்குமாா்

News image

சென்னையில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தலைமையில்  வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். உடன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலை

Updated On :12 ஜூன் 2026, 3:43 am IST

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ரூ.3,766.24 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அந்தத் துறையின் அமைச்சா் ராஜ்குமாா் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சென்னையில் 21 இடங்களில் ரூ.1,230.42 கோடியில் 7,179 அடுக்குமாடி குடியிருப்புகளும், பிற மாவட்டங்களில் 39 இடங்களில் ரூ.2,535.82 கோடியில் 21,372 அடுக்குமாடி குடியிருப்புகளும் என மொத்தம், 60 திட்டப்பகுதிகளில் ரூ.3,766.24 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன.

ஆசிய வளா்ச்சி வங்கி திட்டத்தின் கீழ், 6 இடங்களில் ரூ. 1,030 கோடியில் 5,457 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.210 கோடியில் 215 இடங்களில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை நல்ல தரத்துடனும், உறுதியிடனும், உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.