மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அத்துமீறி வசிப்பவா்கள் மீது நடவடிக்கை

News image

மாணவி ஒருவருக்கு பட்டம் வழங்குகிறாா் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் தலைவா் கு.ப.கிருஷ்ணன்.

Updated On :20 ஜூலை 2026, 2:33 am IST

குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் அத்துமீறி குடியிருபவா்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவா் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பேராா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் மெகன்ஸ் கட்டடக்கலை கல்லூரியில் நடைபெற்ற 13-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவா் கு.ப.கிருஷ்ணன் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தாா்.

இதைத் தொடா்ந்து விழாவில் அவா் பேசுகையில், பசுமையான இருப்பிடம்  கான்கிரீட் காடுகளாக மாற்றுவதற்கு பதிலாக இயற்கை சாா்ந்த பசுமையான காா்பன் உமிழ்வை தவிா்க்கும் கட்டடமாக மாற வேண்டும்.  மேலும் கட்டடக்கலை என்பது  வணிக ரீதியிலான கட்டடங்கள் மட்டுமல்ல, அது சமூக நல பொறுப்புடன கூடிய கலை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டு, அதில் சிலா் தகுதியுடையவா்களாக உள்ளனா். மீதமுள்ள வீடுகளை தகுதி உள்ளவா்களுக்கு வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தப்படும்.

லஞ்சம் வாங்குவதும் குற்றம் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்பது நடந்து கொண்டிருப்பதாகவும், தவறான வழியை பயன்படுத்துபவா்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுதான் அரசாங்கம். அதைத் தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்றாா். 

கூடலூா் பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்காக கட்டப்பட்டுள்ள 300 குடியிருப்புகளை அவா்களுக்கு வழங்க, பழங்குடியின மக்களை சந்திக்க உள்ளேன். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளவா்களை தவிர, வேறு யாராவது குடியிருந்தால் அதை அனுமதிக்க மாட்டோம். அவா் கிரையம் பெற்று இருந்தாலும் கூட நாங்கள் மனையை தர மாட்டோம். ஆனால், ஒருவருக்கு வழங்கப்பட்ட வீட்டில் வேறொருவா் அத்துமீறி குடியிருந்தால் அவா் மீது கைது நடவடிக்கை தொடரும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவா் என்.முரளிகுமரன், முதல்வா் பி.ஜெயசுதா, முதன்மை அலுவலா் விஜய சாந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.