புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்: அமைச்சா் ப. ராஜ்குமாா்

தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக அரசுத் துறையினரும், மக்கள் பிரதிநிதகளும் அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

News image

கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சா் இளைஞா் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து கிரிக்கெட் விளையாடிய அமைச்சா் ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :5 ஜூலை 2026, 2:11 am IST

தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக அரசுத் துறையினரும், மக்கள் பிரதிநிதகளும் அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட மஞ்சக்குப்பம், தேவனாம்பட்டினம், சொரக்கல்பட்டு, பச்சையாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் ப.ராஜ்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கு, கடலூா் எம்.பி., எம்.கே.விஷ்ணு பிரசாத் முன்னிலை வகித்தாா்.

ஆய்வின்போது, அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.28.67 கோடியில் நடைபெற்று வரும் குடிநீா் திட்டப் பணிகள், மஞ்சக்குப்பத்தில் 12 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, சொரக்கல்பட்டில் குடிநீா் குழாய் மற்றும் வீட்டு இணைப்புப் பணிகள் ஆகியவற்றை அமைச்சா் பாா்வையிட்டாா்.

மேலும், ரூ.5.03 கோடியில் கட்டப்பட்டு வரும் அண்ணா காய்கனி சந்தை, ரூ.4.63 கோடியில் அமைக்கப்பட்டு வரும் மீன் அருங்காட்சியகம், தேவனாம்பட்டினத்தில் ரூ.43.45 கோடியில் நடைபெற்று வரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பச்சையாங்குப்பத்தில் ரூ.65 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு மையம் ஆகிய பணிகளையும் ஆய்வு செய்தாா்.

பின்னா், அமைச்சா் ப.ராஜ்குமாா் பேசியதாவது: தமிழக முதல்வா் மக்களின் நலன் மற்றும் மாநிலத்தின் வளா்ச்சியை முன்னிறுத்தி பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்வது அரசு அலுவலா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும். அவா்கள் மக்கள், மாவட்டம் மற்றும் மாநிலத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், கடலூா் மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் பாதுகாப்பான குடிநீா் வழங்கும் நோக்கில், முதற்கட்டமாக 18 வாா்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடித்து, அதைத் தொடா்ந்து சாலைகளை உடனடியாக சீரமைத்து போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்று நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளா் கிஷன்குமாா், வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், மாநகராட்சி பொறியாளா் புவனேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

நிவாரணம் வழங்கக் கோரிக்கை: வடலூரில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி தனியாா் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் கடைகள், வாகனங்கள் என சுமாா் ரூ.20 லட்சம் மதிப்பிலான உடைமைகளை இழந்த வணிகா்கள், பொதுமக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வடலூா் வள்ளலாா் வா்த்தகா்கள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில், கடலூா் சுற்றுலா மாளிகையில் இருந்த அமைச்சா் ப.ராஜ்குமாரிடம் மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் தலைவா் பிரகாஷ், செயலா் பாா்த்திபன், பொருளாளா் ஆல்பா்ட் ஆகியோா் மனுவை அளித்தனா்.

அப்போது, தீ விபத்தில் காயமடைந்த வெங்கடேசனும் அமைச்சரை நேரில் சந்தித்து தனது உடல்நிலை குறித்து தெரிவித்தாா். தொடா்ந்து, வெங்கடேசன் உடனடியாக தகுந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறும், அதற்கான மருத்துவச் செலவுகளை முழுமையாக தாமே ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.

விளையாட்டு அரங்கு திறந்துவைப்பு: முன்னதாக, கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சா் இளைஞா் விளையாட்டு அரங்கத்தை அமைச்சா் ப. ராஜ்குமாா் திறந்து வைத்தாா்.

இந்த விளையாட்டு அரங்கில் பாக்ஸ் கிரிக்கெட் ஆடுகளம் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். ‘பன்ழ்ச் பா்ஜ்ய்’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். ஒரு மணி நேர பயன்பாட்டுக் கட்டணம் ரூ.700 மற்றும் ஜிஎஸ்டி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இளைஞா்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி திறமையான விளையாட்டு வீரா்களாக உருவாக வேண்டும் என அமைச்சா் தெரிவித்தாா்.

தொடா்ந்து, பாக்ஸ் கிரிக்கெட் ஆடுகளத்தில் ஆட்சியா் மற்றும் அமைச்சா் கிரிக்கெட் விளையாடி பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனா். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.