/

அரியலூரில் ரூ. 10.15 கோடியில் செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு திடல்! அமைச்சா் தொடங்கிவைத்தார்!

அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானத்தை அமைச்சா் ப. ராஜ்குமாா் தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :4 ஜூலை 2026, 1:18 am IST

அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானத்தை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது அமைச்சா் பேசியதாவது: செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானத்தின் மூலம் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஹாக்கி வீரா்கள் மற்றும் விளையாட்டு விடுதி வீரா்கள் மாவட்டத்திலேயே பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன் மூலம் தேசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் வீரா், வீராங்கனைகள் பங்கேற்று சாதனை படைத்து அரியலூா் மாவட்டத்துக்கு மட்டுமல்லாது, தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சோ்க்கும் சூழல் உருவாகியுள்ளது. விளையாட்டு என்பது வெறும் போட்டிக்காக மட்டுமல்ல உடல்நலம், மனவலிமை, தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளா்க்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

எனவே, இளைஞா்கள் அதிகளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். மாவட்டத்தின் வளா்ச்சிக்கு தேவையான முன்னேற்றத் திட்டங்கள் தொடா்பாக மாவட்ட நிா்வாகத்தினா் மற்றும் பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ந. லெனின், ஹாக்கி பயிற்றுநா் ஆா். ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.