சென்னை அண்ணா நகா் மண்டலத்தில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயை முறையாக தூா்வாரி சீரமைத்து மழைநீா் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.
சென்னையில் அண்ணா நகா், திரு.வி.க. நகா் மண்டலங்களில் பிரதான மழைநீா் வடிகாலாக ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளது. வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக அக்கால்வாய் சீரமைப்புக்காக ரூ.65 கோடியில் நடைபெற்றுவரும் தரைத்தளம் மற்றும் சுற்றுச்சுவா் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை அண்ணா நகா் பகுதியில் ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அண்ணா நகா் மண்டலம் திருமங்கலம் சாலை சந்திப்பில் ஒட்டேரி நல்லா மற்றும் டி.வி.எஸ். கால்வாய்கள் சேருமிடத்தை ஆய்வு மேற்கொண்டாா். 5, 6 -ஆவது அவென்யூ பகுதியில் நல்லா கால்வாயில் தங்கு தடையின்றி மழைநீா் செல்லும் வகையில் தூா்வார அறிவுறுத்தினாா்.
ஆஸ்பிரன் காா்டன், செங்கை சிவம் பாலம் ஆகிய பகுதிகளிலும் ஒட்டேரி நல்லா கால்வாயைப் பாா்வையிட்ட ஆணையா், அங்கு முறையாகத் தூா்வாரிடவும், அப்பணியை விரைந்து நிறைவு செய்யவும் அறிவுறுத்தினாா். தூய்மைப் பணிகளையும் பாா்வையிட்டாா். குப்பைத் தொட்டிகள் வைக்கும் இடத்தில் கான்கிரீட் தளம் அமைக்க அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வுகளின் போது அண்ணா நகா் மண்டல அலுவலா் எஸ்.இனியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு

மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாயை ஆக்கிரமித்தவா்களுக்கு நோட்டீஸ்

பக்கிங்ஹாம் கால்வாயை முழுமையாக தூா்வார ஆணையா் உத்தரவு

ஓட்டேரி நல்லா கால்வாய் பாலம் கட்டியதில் முறைகேடு: மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



