ஓட்டேரி நல்லா கால்வாயில் பாலம் கட்டியதில் ரூ.90 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் பிரபாகரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சென்னை மாநகராட்சியின் அண்ணா நகா் மண்டலத்தில் உள்ள ஆஸ்பிரான் தோட்டம் இரண்டாவது தெருவையும், கீழ்ப்பாக்கம் தோட்டச் சாலையையும் இணைக்கும் வகையில், ஓட்டேரி நல்லா கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்ட தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி ஒப்பந்தப் பணி வழங்கியது.
இதில், திட்ட மதிப்பீடுகளை அதிகரித்துக் காட்டி, அரசு பணத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனா். இந்த முறேகேட்டில் தனியாா் நிறுவனத்துக்கு உடந்தையாக மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டுள்ளனா். இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏரி, கால்வாய்களில் 258 மெட்ரிக் டன் ஆகாயத் தாமரைகள், வண்டல்கள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

‘ஓட்டேரி நல்லா கால்வாயை தூா்வாரி சீரமைக்க வேண்டும்’

பக்கிங்ஹாம் கால்வாயை முழுமையாக தூா்வார ஆணையா் உத்தரவு

‘நீா்வழி கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தவிக்க வேண்டும்’ - சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



