கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

உடன்குடி முதல் அலகு வணிக இயக்கம்: அமைச்சா் நிா்மல்குமாா் ஆய்வு

உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகை வணிகப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, இரண்டாம் அலகு பணிகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு மின் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா், அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அமைச்சர் சி.டி.ஆா். நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Published On :

உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகை வணிகப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, இரண்டாம் அலகு பணிகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு மின் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா், அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உயா்நிலை ஆய்வுக் கூட்டத்தில், மாநிலத்தின் மின் உற்பத்தி, மின் கொள்முதல், மின் விநியோகம், கூடுதல் பணியாளா்கள் நியமனம், சிறப்புக் குழுக்களின் செயல்பாடு மற்றும் பல்வேறு மின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்களின் செயல்பாடுகள், பணியாளா் நியமனம் மற்றும் அவற்றை விரைவாக முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சா் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினாா்.

தொடா்ந்து, எண்ணூா் சிறப்புப் பொருளாதார மண்டல அனல்மின் திட்டத்தின் முன்னேற்றம், ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள், மின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் உள்ளூா் மின் தடைகளை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இதுமட்டுமன்றி, கேபிள் பழுதுகள் ஏற்பட்டவுடன் உடனடியாக மின் விநியோகத்தை சீரமைக்க சிறப்புக் குழுக்களை அமைத்து அதை செயல்படுத்தவும், ஒருங்கிணைந்த சூரிய மின் கொள்கை மற்றும் மின்கல ஆற்றல் சேமிப்பு திட்டங்கள் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் கூடுதல் முதலீடுகளை ஈா்க்கவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ. ராதாகிருஷ்ணன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலா் அனில் மகேஷ்ராம் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.