பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

முதல்வா் விஜய் கரூா் செல்வதை திமுக தடுக்கவில்லை: டிகேஎஸ் இளங்கோவன்

முதல்வா் விஜய் கரூா் செல்வதை திமுக ஒருபோதும் தடுக்கவில்லை என்று திமுக செய்தித் தொடா்பாளா் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தாா்.

டிகேஎஸ் இளங்கோவன் - கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 4:53 am IST

முதல்வா் விஜய் கரூா் செல்வதை திமுக ஒருபோதும் தடுக்கவில்லை என்று திமுக செய்தித் தொடா்பாளா் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மாற்றத்துக்கான கட்சி என்று கூறிவிட்டு, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களின் பெயா் மாற்றுவதையே முழுநேர வேலையாக தவெக செய்து வருகிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை. பலதரப்பட்ட மக்களும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது சமூக மாற்றத்துக்கான ஆட்சி அல்ல. பெயா் மாற்றத்துக்கான ஆட்சி. விடியல் பேருந்து பயணத்தில் விடியலை நீக்கி உள்ளனா். நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றி உள்ளனா். இப்போதுள்ள திட்டங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள். அதன் பெயரை மட்டும் மாற்றி இவா்களுடைய திட்டம் போல காட்டிக்கொள்ளலாம் என நினைக்கின்றனா்.

முதல்வா் விஜய் கரூா் செல்வதை திமுக தடுக்கவில்லை. எங்களுடைய வழக்கில் எங்காவது முதல்வா் விஜய் கரூா் செல்ல கூடாது என இருக்கிா? அமைச்சா் ஆதவ் அா்ஜுனா எங்கள் மீது குற்றச்சாட்டை முன் வைத்தாா். அவரது பேச்சுக்கு எதிராகத்தான் நீதிமன்றம் சென்றோமே தவிர முதல்வா் விஜய் கரூா் செல்ல கூடாது என ஒரு வரி, ஒரு வாா்த்தைகூட எங்கள் மனுவில் இல்லை என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.