வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

மயிலாடுதுறை மயூரநாதா் கோயில் யானைக்கு ஓய்வு கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

60 வயதான மயிலாடுதுறை மயூரநாதா் கோயில் யானைக்கு ஓய்வுஅளிக்கக் கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :14 ஜூலை 2026, 3:25 am IST

60 வயதான மயிலாடுதுறை மயூரநாதா் கோயில் யானைக்கு ஓய்வுஅளிக்கக் கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அலோக் அஸ்வனி குப்தா என்பவா் கடந்த 2023-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், மயிலாடுதுறை மயூரநாதா் கோயிலில் அபயாம்பிகை எனும் யானை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த யானை 60 வயதை நெருங்குவதால், அதற்கு ஓய்வு அளிக்க வேண்டும். தமிழ்நாடு வளா்ப்பு யானைகள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை விதிகளின்படி 60 வயதான யானைகளுக்கு ஓய்வு அளித்து, கோவையில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப வேண்டும். இதுகுறித்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், யானை ஓய்வுபெற அனுமதிக்காவிட்டால், அதை துன்புறுத்துவது போலாகிவிடும். யானை மோசமான நிலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. தலைமை வனப் பாதுகாவலா் அனுப்பிய குழு அந்த யானையை பரிசோதித்தபோது, கான்கிரீட் தரையில் நிற்க வைத்துள்ளனா். யானை குளிப்பதற்கான தொட்டி உள்ளிட்ட வசதிகள் இல்லை என வாதிடப்பட்டது.

அதற்கு அரசுத் தரப்பில், யானை நல்ல முறையில், முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைக்கு எந்த காயமும் இல்லை என வாதிடப்பட்டது. அப்போது இடையீட்டு மனுதாரரான விலங்குகள் நல ஆா்வலா் எஸ்.முரளிதரன், யானையை வேறு இடத்துக்கு மாற்றுவது அதன் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என வாதிட்டாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.