டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கு: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

விஸ்வநத்தம் ஊராட்சியில் உள்ள மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2026, 5:46 am IST

விஸ்வநத்தம் ஊராட்சியில் உள்ள மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சித்துராஜபுரத்தைச் சோ்ந்த ஞானதாஸ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

சிவகாசி, விஸ்வநத்தம் ஊராட்சிக்குள்பட்ட கவிதா நகரில் அரசு மதுக் கடை இயங்கி வருகிறது. தேசிய நெடுஞ்சாலை, கல்வி நிறுவனங்கள், கோயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 500 மீட்டா் தொலைவிலேயே மதுக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், கவிதா நகரில் விதிகளை மீறி மதுக் கடை அமைந்துள்ளது. இதனால், பொதுமக்கள், பள்ளி மாணவா்கள், பெண்கள் உள்ளிட்டோா் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா்.

மேலும், கடந்த மே 12-ஆம் தேதி விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள 717 மதுக் கடைகள் உடனடியாக அடைக்கப்படும் என தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தெரிவித்திருந்தாா்.

எனவே, தமிழக அரசின் அரசாணையின்படி விஸ்வநத்தம் ஊராட்சி, கவிதா நகரில் செயல்பட்டு வரும் மதுக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் குறிப்பிடும் மதுக் கடை தமிழக அரசு மூடுவதாக அறிவித்த 717 கடைகளில் ஒன்றா? என்பதை உறுதி செய்வதோடு, தொலைவு விதிகள் மீறப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.