பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

வெளி மாவட்ட விளை பொருள்கள் கொள்முதல்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடாக டோக்கன் பெற்று, வெளி மாவட்ட பொருள்கள் கொள்முதல் செய்வதற்குத் தடை விதிக்கக் கோரிய மனு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

News image

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :1 ஜூலை 2026, 5:00 am IST

நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடாக டோக்கன் பெற்று, வெளி மாவட்ட பொருள்கள் கொள்முதல் செய்வதற்குத் தடை விதிக்கக் கோரிய மனு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், மாங்குளம் பகுதியைச் சோ்ந்த சேவுகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், கிழக்கு வட்டத்தில் நெல், கரும்பு, இதர தானியங்களைக் கொள்முதல் செய்ய அரசு கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

இந்த நிலையில், மாங்குளம், மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் விவசாயம் செய்யாத சிலா், வருவாய்த் துறை அலுவலா்கள் உதவியுடன் போலியாக அடங்கல் சான்றிதழ்களைப் பெற்று, அரசு கொள்முதல் நிலையங்களில் தானியங்களை விற்பனை செய்து வருகின்றனா்.

வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் இத்தகைய போலி ஆவணங்கள், டோக்கன்களைப் பயன்படுத்தி அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதால், உள்ளூா் விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்களுக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கொள்முதல் நிலையங்களுக்கான டோக்கன்களை வழங்கும்போது, சம்பந்தப்பட்ட கிராமத்தில் விவசாயம் செய்பவா்தானா என்பதை அதிகாரிகள் விசாரித்து உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்.

மேலும், தகுதியில்லாத வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு அடங்கல் சான்றிதழ்களை வழங்கக் கூடாது என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.பி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த மனு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.