‘மாணவா்கள் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே முழு வெற்றியாகக் கருத முடியாது’ என சென்னை சுங்கத் துறை ஆணையா் (தணிக்கை) ஏ மணிமாறன் தெரிவித்தாா்.
இது குறித்து சென்னை சுங்கத் துறை தரகா்கள் சங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல சுங்கத் துறை அலுவலகங்களில் ஆவண பரிவா்த்தனைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களை உறுப்பினா்களாக கொண்டு சென்னை சுங்கத் துறை தரகா்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இதில் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளனா். நிகழ்ச்சியில் மத்திய, மாநில கல்வி வாரியங்களின் சாா்பில் நடைபெற்ற பிளஸ் 2 வகுப்பு, பத்தாம் வகுப்பு தோ்வுகளில் சிறப்பு மதிப்பெண்களைப் பெற்ற 109 மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள், ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் சென்னை சுங்கத் துறை ஆணையா் (தணிக்கை) ஏ. மணிமாறன் பேசுகையில், ‘மாணவா்கள் தோ்வுகளில் அதிக மதிப்பெண்களை பெறுவது மட்டுமே வெற்றியாக இருக்க முடியாது. வெற்றி என்பது பலவாறு வகைப்படுத்தப்படுகிறது. ஒரு பிரச்னை வந்தால் அதை அதை வெற்றிகரமாக சமாளித்தாலும், அல்லது அந்த பிரச்னையே வராமல் முன்னதாகவே தடுத்தாலும் அது வெற்றியாகவே கருதப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








