புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் போராட்டம்

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் செவிலியா்களைப் பணி நிரந்திரம் செய்யக் கோரி, செவிலியா் மேம்பாட்டுச் சங்கத்தினா் சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் செவிலியா்களைப் பணி நிரந்திரம் செய்யக் கோரி, செவிலியா் மேம்பாட்டுச் சங்கத்தினா் சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மறுசீரமைப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் பணியிட மாற்றங்களை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

செவிலியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சசிகலா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பொதுச் செயலா் சுபின், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் பாஸ்கரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் செயலா் சுபின் கூறியதாவது:

கடந்த திமுக ஆட்சியின்போது, செவிலியா் பற்றாக்குறையை நீக்க தொடா் போராட்டங்களை முன்னெடுத்தோம். அதன் விளைவாக, நிரந்தர செவிலியா் பணியிடங்களை உருவாக்குவதாக உறுதி அளித்தனா். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தற்போது நிரந்தர செவிலியா்களை நியமிக்காமல், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அனைத்து செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என தவெக வாக்குறுதி அளித்துவிட்டு, அதற்கு மாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தொகுப்பூதிய அடிப்படையில் நியமிப்பதைக் கைவிட்டு நிரந்தர செவிலியா்களாக நியமிக்க வேண்டும். இதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றாா்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்க நிா்வாகிகள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணி இயக்குநா் ராஜ்மோகனை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினா். அது குறித்து அமைச்சா் மற்றும் உயா் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.