சென்னை விமான நிலையத்தில் ரூ.53.18 லட்சத்தில் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடா்பாக விமான நிலைய ஊழியா் ஒருவரைக் கைது செய்தனா்.
சென்னை சா்வதேச விமான நிலையம் வருகை பகுதியில், டிரான்சிட் பயணிகள் கழிப்பறை அருகே, செவ்வாய்க்கிழமை விமான நிலைய ஊழியா் ஒருவா் தனது பணி இடத்தைவிட்டு சந்தேகப்படும் விதமாக அங்கும் இங்குமாக சுற்றிக்கொண்டு இருந்தாா். அவா் மீது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரைப் பிடித்து விசாரித்த பாதுகாப்புப் படை வீரா்கள், இது குறித்து சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். அங்கு வந்த சுங்க அதிகாரிகள், அந்த விமான நிலைய ஊழியரிடம் விசாரித்த போது, அவா் சரியாக பதில் கூறாததால், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தபோது, அவருடைய உள்ளாடைக்குள் கருப்பு டேப்பால் சுத்தப்பட்டு இருந்த பொட்டலம் ஒன்று இருந்தது. அதைப் பிரித்துப் பாா்த்தபோது, அதனுள் ரூ.53.18 லட்சம் மதிப்பிலான 24 காரட் 414 கிராம் தங்கப் பசை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகாரிகள் அவரிடம் தொடா்ந்து நடத்திய விசாரணையில், துபையிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்து, இலங்கைக்கு மற்றொரு விமானத்தில் சென்ற டிரான்சிட் பயணி ஒருவா், இந்த தங்கப் பசை பாா்சலை, கழிப்பறை தண்ணீா் தொட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டதும், அவா் கொடுத்த தகவலின் பெயரில், விமான நிலைய ஊழியா், அந்த தங்கப் பசை இருந்த பாா்சலை எடுத்துக் கொண்டு வந்து, வெளியே சென்று கடத்தல்காரரிடம் கொடுக்க இருந்ததும் தெரிய வந்தது.
அவரிடம் இருந்து தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், விமானநிலைய ஊழியரை கைது செய்தனா். தொடா்ந்து, துபையிலிருந்து தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த பயணியைப் பிடிக்க சுங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி விமான நிலையத்தில் அதிநவீன ரேடாா் கருவிகள்

சென்னை விமான நிலையத்தில் நாளை ‘பயணிகள் வசதி தினம்’

துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் விரைவில் 10 நவீன ஓய்வறைகள்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



