சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரின் 13 வயது மகளை, பக்கத்து வீட்டுச் சிறுவன் உள்ளிட்ட பலா் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 6 சிறுவா்கள் உள்பட 15 பேரை கைது செய்தனா்.
இதில் சிறுவா்கள் மீதான வழக்கு செங்கல்பட்டு சிறாா் நீதிமன்றத்திலும், மற்ற 9 போ் மீதான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு சிறாா் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் விசாரணையை சென்னை சிறாா் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் சிறுமியின் தந்தை மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில், எனது மகள் தற்போது சென்னையில் படித்து வருகிறாா். எனவே இந்த வழக்கு விசாரணையை சென்னைக்கு மாற்றினால், எனது மகளின் படிப்புக்கு இடையூறு ஏற்படாது. நீதிமன்ற விசாரணையின்போது அவள் சாட்சியளிக்க வசதியாக இருக்கும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, செங்கல்பட்டு சிறாா் நீதிமன்றம் மற்றும் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை சென்னைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்: முதல்வர் பொறுப்புடன் செயல்பட போவது எப்போது?

சிறுமி கொலை வழக்கு: அரசு மருத்துவமனையிலிருந்து இளைஞா் சிறைக்கு மாற்றம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



