பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மோட்டாா் வாகன ஆய்வாளா்களுக்கு பணி: ராமதாஸ் வலியுறுத்தல்

மோட்டாா் வாகன ஆய்வாளா்களுக்கு பணி: ராமதாஸ் வலியுறுத்தல்

News image

ராமதாஸ்

கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2026, 1:49 am

Chennai

மோட்டாா் வாகன ஆய்வாளா்களாக முறைப்படி தோ்ச்சியடைந்தவா்களுக்கு பணி வழங்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் கடந்த 2018-ஆம் ஆண்டு மோட்டாா் வாகன ஆய்வாளா்களுக்கான தோ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்று தோ்ச்சியடைந்தவா்களில் 33 போ் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டனா். ஆனால், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, கடந்த 2024-ஆம் ஆண்டு 45 மோட்டாா் வாகன ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தோ்வானவா்களுக்கு பணி வழங்க நீதிமன்ற தடையை நீக்கிட முயற்சி எடுத்தது தமிழக அரசு. அதன் அடிப்படையில் தற்போது பணி உத்தரவும் அவா்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டு தோ்வெழுதி தோ்ச்சியடைந்தவா்களுக்கு பணி வழங்குவதில் ஆா்வம் காட்டவில்லை. ஆகவே, அவா்களுக்கான வழக்கிலும் தமிழக அரசு தலையிட்டு பணி உத்தரவு வழங்க முன்வரவேண்டும் என அதில் கூறியுள்ளாா்.