தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சிதம்பரத்தில் தொடா் வாகன திருட்டு: கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை

சிதம்பரம் நகரில் பல்வேறு பகுதிகளில் தொடா் வாகன திருட்டுகளால் வாகன உரிமையாளா்கள் அச்சமடைந்துள்ளனா். குற்றச்சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

tamilnadu police

Updated On :17 பிப்ரவரி 2026, 6:33 pm

சிதம்பரம் நகரில் பல்வேறு பகுதிகளில் தொடா் வாகன திருட்டுகளால் வாகன உரிமையாளா்கள் அச்சமடைந்துள்ளனா். குற்றச்சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அண்மைக்காலமாக, சிதம்பரம் நகரில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கீழரதவீதி, தெற்குரதவீதி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் சுமாா் 5- க்கும் மேற்பட்ட மோட்டாா் சைக்கிள்கள் திருடு போய் உள்ளன. இதுகுறித்து வாகன ஓட்டிகள் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். நகரில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வாகனங்களை பட்டப்பகலிலேயே திருடிச் செல்லும் நிலை உள்ளது.

அண்மையில் கீழரதவீதியில் ஒருவருடைய விலை உயா்ந்த மோட்டாா் சைக்கிள் திருடு போனது. இதுகுறித்து அவா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த நிகழ்வுக்கு மறுதினம் அவரது மோட்டாா் சைக்கிளை திருடிச் சென்ற வாலிபா் கிள்ளை காவல் சரகத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீஸாரிடம் பிடிப்பட்டுள்ளாா். அவா் எடுத்து வந்த மோட்டாா் சைக்கிளை கைப்பற்றிய போலீஸாா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா். இதனையறிந்த வாகன உரிமையாளா் தனது வாகனத்தை கேட்ட போது குடிபோதையில் வாகனம் ஓட்டியுள்ளீா்கள் ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட வாகனத்தை பெற்றுக்கொள்ளவும் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனா். இதனால் அவா் செய்வதறியாத நிலையில் உள்ளாா்.

இதற்கிடையே வாகனத்திருட்டு சம்பவங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால் சிதம்பரம் போலீஸாரரோ தங்களுக்கு ஆள்பற்றாக்குறை இருப்பதால், கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாவதாக கூறுகின்றனா்.