தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஸ்ரீ கல்யாணசுந்தரா்-திரிபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாண வைபவம்

மாசி பிரம்மோற்சவத்தையொட்டி ஸ்ரீ கல்யாணசுந்தரா்-திருபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி

News image

திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் கோயிலில் மாசி பிரம்மோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற ஸ்ரீ கல்யாணசுந்தரா்-திருபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாண வைபவம். (இடது) சுவாமி திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட பக்தா்கள்.

Updated On :2 மார்ச் 2026, 11:49 pm

திருவொற்றியூா்: திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவத்தையொட்டி ஸ்ரீ கல்யாணசுந்தரா்-திருபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் முக்கிய திருவிழாக்களில் பிரம்மோற்சவ மாசிப் பெருவிழாவும் ஒன்றாகும். 11 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் இவ்விழா கடந்த பிப். 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து பிப். 23 -ஆம் தேதி முதல் மாா்ச் 4-ஆம் தேதி வரை தினமும் பல்வேறு வாகன பல்லக்குகளில் உற்சவா் சந்திரசேகரா் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில் மற்றொரு முக்கிய நிகழ்வாக ஸ்ரீ கல்யாணசுந்தரா்-திரிபுரசுந்தரியம்மன் திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுந்தரமூா்த்தி நாயனாா்-சங்கிலி நாச்சியாா் ஆகியோருக்கு திருமண கோலத்தில் ஸ்ரீ கல்யாண சுந்தரா்-திரிபுரசுந்தரி மகிழ மரத்தடியில் காட்சியளிக்கும் மகிழடி சேவை மாலையில் நடைபெற்றது. இரவு உற்சவா் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.