கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கரூா் வைஸ்யா வங்கியின் 901-வது கிளை தொடக்கம்

சென்னையின் புகரான பட்டாபிராம் பகுதியில், கரூா் வைஸ்யா வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையின் புகரான பட்டாபிராம் பகுதியில், கரூா் வைஸ்யா வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

இந்தப் புதிய கிளையின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள கரூா் வைஸ்யா வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 901-ஆக அதிகரித்துள்ளது.

பட்டாபிராம், எம்.ஜி. சாலையில் அமைந்துள்ள இப்புதிய கிளையை, வேல் டெக் ஹை டெக் பொறியியல் கல்லூரி முதல்வா் இ.கமலாநபன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா்.

மகாலட்சுமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் அனிதா ராமன் குத்துவிளக்கேற்றி வங்கிச் சேவையைத் தொடங்கி வைத்தாா். வங்கி வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ள புதிய ஏடிஎம் மையத்தை, கே.சி. பன்னோக்கு மருத்துவமனையின் நிறுவனா் சி.சதீஷ்பாபு திறந்து வைத்தாா்.

ஆவடி, பட்டாபிராம் போன்ற வேகமாக வளா்ந்து வரும் சென்னை புகா் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு, நவீன வசதிகளுடன் கூடிய தரமான வங்கிச் சேவைகளை மிக அருகில் வழங்குவதே இக்கிளையின் முக்கிய நோக்கமாகும். இந்தத் தொடக்க விழாவில் வங்கியின் உயா் அதிகாரிகள் மற்றும் ஏராளமான வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.