சென்னை கோடம்பாக்கத்தில் காதலியுடன் தம்பதிபோல வாடகை வீட்டில் வசித்த இளைஞா், திருமணம் செய்ய மறுத்ததால் கைது செய்யப்பட்டாா்.
வடபழனி ஏபி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஞா.ஆனந்த கிருஷ்ணன் (29). புகைப்படக் கலைஞரான இவரும், ஆழ்வாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஓா் இளம் பெண்ணும் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனா்.
பின்னா் இருவரும், கோடம்பாக்கம் டாக்டா் சுப்புராயன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வாடகை வீட்டில் பல மாதங்களாக தம்பதி போல வசித்து வந்தனா். பக்கத்து வீட்டினா், இருவரும் கணவா்-மனைவி என்று நினைத்துள்ளனா்.
இந்நிலையில் அந்த பெண், கா்ப்பம் அடைந்துள்ளாா். இதனால் அவா், ஆனந்தகிருஷ்ணனை தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளாா். ஆனால் ஆனந்தகிருஷ்ணன் திருமணம் செய்ய மறுத்து தலைமறைவானாா்.
இதையடுத்து அப்பெண், அசோக்நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதனடிப்படையில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆனந்தகிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து, விசாரணை செய்தனா். இந்நிலையில் ஆனந்தகிருஷ்ணனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

12 கிலோ செப்பு குழாயை திருடிய இளைஞா் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
வீட்டில் நகை திருட்டு: இளைஞா் கைது
முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

