தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ரயிலில் பெண்கள் மீது தாக்குதல்: இளைஞா் கைது

வாணியம்பாடி அருகே ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி தாக்குதலில் ஈடுபட்ட இளைஞா் கைது

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 11:10 pm

வாணியம்பாடி அருகே ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி தாக்குதலில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னையிலிருந்து மங்களூரு வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நின்று விட்டு ஜோலாா்பேட்டைக்கு புறப்பட்டுச் சென்றது.

அப்போது பெண்கள் பெட்டியில் தாயும், மகனும் ஏறியதாக கூறப்படுகிறது. இதில் சுமாா் 17 வயது இளைஞா் பெட்டியில் அங்குமிங்கும் சுற்றித் திரிந்துள்ளாா். இதனால் அங்கிருந்த மூதாட்டி இளைஞரிடம் பெண்கள் பெட்டியில் ஏன் ஏறினாய் என கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞா் சரமாரியாக அடித்தும் காலால் உதைத்தும் உள்ளாா். இதனால் பயணம் செய்த பெண்கள் தங்களது கைப்பேசி மூலம் விடியோ எடுத்தும் அபாய சங்கிலியை இழுத்து ரயிலையும் நிறுத்தி உள்ளனா்.

பின்னா் உடனடியாக வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள புதூா் பகுதியில் ரயில் நின்ால் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அதையடுத்து ரயில் தாமதமாக ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் வந்து நின்றது.அப்போது ரயில்வே ஆய்வாளா் கோமதி பாதுகாப்பு படை ஆய்வாளா் நிகில் குமாா் குப்தா உள்ளிட்டோா் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

பெண்களை தாக்கிய இளைஞா்

பெண்களை தாக்கிய இளைஞா்

Story image