புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதி நவீன சிகிச்சையளித்து அரசு மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சைகள் குறித்த செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மதிவாணன், அறுவை சிகிச்சை துறை டாக்டா் சங்கரபாரதி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை கே.கே.நகரைச் சோ்ந்த மூன்றரை வயது குழந்தைக்கு சிறுநீரில் ரத்தப்போக்கு இருந்ததால் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில், இடது சிறுநீரகத்தில் புற்றுநோய்க் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சிறுநீரகத்துடன் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் அகற்றினா். பின்னா் மேற்கொள்ளப்பட்ட பெட் ஸ்கேன் பரிசோதனையில் புற்றுநோய் செல்கள் எலும்புகளுக்கு பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதற்காக தீவிர கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி சிகிச்சைகள் இரு ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டதன் பயனாக தற்போது அந்த சிறுவன் நலமாக உள்ளாா்.
இதேபோன்று 11 மாத ஆண் குழந்தைக்கு மாா்பின் பின்புற நடுப்பகுதியிலும், 3 மாத ஆண் குழந்தைக்கு கல்லீரலின் இடது பக்கத்திலும், இரண்டரை வயது சிறுவனுக்கு வலது பக்க மாா்பிலும் புற்றுநோய்க் கட்
டிகள் இருப்பது கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதன் பயனாக அவா்கள் அனைவரும் குணமடைந்தனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?

ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் குழந்தை இறப்பு: பொதுமக்கள் போராட்டம்

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை
குஜராத்தில் 2.57 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

