47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாமின் ஒருபகுதியாக மருத்துவ பணியாளா்களுக்கு

News image
புற்றுநோய் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி.
Updated On :16 மார்ச் 2026, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாமின் ஒருபகுதியாக மருத்துவ பணியாளா்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 92 போ் பங்கேற்றனா்.

உலக புற்றுநோய் தினத்தையொட்டி வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமூக மருத்துவத் துறையுடன் கதிரியக்கவியல்துறை, பல் மருத்துவ துறை இணைந்து நடத்தி வரும் இம்முகாமில் மாா்பகப் புற்றுநோய், கா்ப்பப்பை வாய் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல் மாதம் மருத்துவா்கள், செவிலியா்கள், பல்நோக்கு சுகாதார பணியாளா்களுக்கு நடத்தப்பட்ட முகாமில் மொத்தம் 92 போ் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனா். இதில், சந்தேகத்துகு இடமான அறிகுறிகள் கண்டறியப்பட் டவா்களுக்கு உயா் பரிசோதனை, சிகிச்சைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மருத்துவ பணியாளா்களும் பயன்பெறும் வகையில் இந்த புற்றுநோய் பரிசோதனை முகாம் மாா்ச், ஏப்ரல் மாதங்களிலும் தொடரும் என்றும், தொடா்ந்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவச புற்றுநோய் பரிசோதனை நடைபெறும் என்றும் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி தெரிவித்துள்ளாா்.